Thursday, 25 April 2013

Reason behind the Child Labours [ குழந்தை தொழிலாளி ]




அன்று உறக்கத்தை கலைக்கும் போது எனக்கு தெரியாது ஓர் கொடூரனை பார்க்கபோகிறேன் என்று... வழக்கம் போல் ஏதிர்பாராத நேரத்தில் அலறியது கைபேசி... மறுமுனையில் அத்தி பூ பூத்தார் போல் அழைக்கும் ஓர் நண்பன்... அவனது ஊரை சேர்ந்த பெண் ஒருவளுக்கு இரத்தம் தேவைப்பட்டது... ஏழை என்பதால் அவர்கள் அரசு மருத்துவ மனையை அணுகி இருக்கிறார்கள்...


அந்த பெண்ணை பார்க்க  விரைந்தேன்...  அவளை பார்பதற்குள் அவளது கணவர் பற்றி சில விவரங்கள் தெரியவந்தது ... அவர் தின கூலிக்கு மரத்தை வெட்டும் குடி-மகன் அரசாங்கத்துக்கு வருவாய் ஈட்டாத நியாய விலைக்கடை திசை கூட தெரியாது... இப்படி இருக்க நோயாளியின் நிலை குறித்து செவிலியர் மூலம் அறிந்தேன்...
அவலமான நிலை, அவளின் நிலை சீராக குறைந்தது 6 (ஆறு) பாட்டில் இரத்தம் தேவைப்படும்... வேதாரணய அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி , நாகை, திருவாரூர் என அலைந்து எங்கும் கைவிரித்ததால்... இறுதியில் தஞ்சையில் தஞ்சம் அடைந்தனர்... பாவம் அந்த பெண், பார்ப்பதற்கு பரிதாபமாய் ஒரு தோற்றம்...  அவள் நிலை பரிதாபத்தின் உச்சம்... அவளுக்கு இரத்தசோகை, இது பெரிய வியாதி அல்ல... இரத்சோகைக்கான காரணம் மிகப்பெரிய வியாதி... 
அவளுக்கு அது ஆறாவது மாதம்... வயது சுமார் 25 இருக்கும்... அவள் கர்ப்பம் அடைவது இதோடு ஏழாவது முறை.   பாவம்  அவள் உயிரை மட்டுமே உடலில்  சொந்தமாய் வைத்து இருக்கிறாள்... அவளின் கணவர் ஓர் தார்த்தவாதி, ஆணுக்கு வலு இருந்தால் போதுமே துணைவிக்கா  பஞ்சம் என்று திடமாய் இருந்தார்... அப்படியானால் அந்த ஆறு குழந்தைகளின் ஏதிர்காலம் ???
அவரை அழைத்து அறிவுரை கூறப்பட்டது அவருக்கு குடும்பகட்டுபாடு செய்ய வினவினர். ஒரு வாரம் வருமானம் இல்லாமல் போகும் என்பதற்காக இவர் முன்வரவில்லை

இப்படியும் மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்... இப்படி இருப்பின் அக்குழந்தைகள்  வளர போதுமான வருமானம் எப்படி கிடைக்கும்... குழந்தை தொழிலாளர்கள் தோன்ற இதுவே  முக்கிய காரணம்... ஏன் அவர்கள் பாதை மாறி பொய், திருட்டு என பல சமுதாய சீர்கேடுகளை செய்யவும் வாய்ப்பு உள்ளது ... குழந்தைகள் தவறான பாதையை தேடிக்கொள்வார்கள் என்பது என் கூற்று அல்ல மாறாக அவர்களை சரியாக கவனிக்காவிட்டால் பாதை மாறலாம்
இன்றைய தினம் விஞ்ஞானம் நிறையவே வளர்ந்து விட்டது. கத்தி இன்றி ரதம் இன்றி யுத்தம் அல்ல அறுவை சிகிச்சை கூட சாத்தியம். நம் அரசு குடும்ப அட்டையை சீர் திருத்தலாம்... நாம் இருவர் நமக்கு இருவர் காலம் போய் ஒருவர் ஆகியது... நாமே இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்பதற்கு ரொம்பக்காலம் இல்லை c

No comments:

Post a Comment