Monday, 6 May 2013

Our Society became unsafe for Real Women too.... need to Stop Rape ...


ஒவ்வொரு நாள் பொழுது சாய்வதற்குள் சாய்க்க படுகிறாள் எங்கோ ஒரு மங்கை, பொக்கிஷமாக பாதுக்காக்க வேண்டிய பெண்ணின் கற்ப்பு கலங்க படுகிறது தினமும்... இந்திய தலை நகருக்கும் தமிழக தலை நகருக்கும் ரொம்ப தூரம் இல்லை, இந்த பதிவு வெளி வராத, வெளி வர முடியாத பல பெண்களின் அலறல்...  


ஒவ்வொரு நாளும் மனிதன் பயணிக்கிறான்... ஒவ்வொரு பயணமும் பயன்னுள்ள பல தகவல்களை தருகிறது... அன்று என்னோடு பயணித்த ஒரு நபர் அதிரவைத்தார் சில தகவல்களால்... சென்னை மின் தொடர்வண்டியில் முதல் வகுப்பு பயணிகள் வாயை கொட்டாவி விட கூட திறக்க யோசிப்பர்...
ஏதிரே அமர்ந்திருந்த ஓர் தாய் தன்  குழந்தையை தூங்கவைக்கும் தாலாட்டு மறந்ததால் நாடியதோ தூங்க வைக்கும் மாத்திரையை... அவளுக்கு மாத்திரையின் அளவு தெரியவில்லை, அவள் மாத்திரையை உபயோகம் செய்ய ஆரம்பித்து இருக்கலாம் இல்லை, வழக்கமாக வாங்கும் மாத்திரை கிடைக்காமல்  இருக்கலாம்எனக்கு சரியான அளவு தெரியவில்லை ஆனால் அவளது அளவு அதிகம் என தோணியதுஎன் அருகாமையில் அமர்ந்து இருந்த ஒரு நபர் இதை பற்றி நன்கு அறிந்து இருந்தார்அவர் கொடுத்த அறிவுரையின் படி மாத்திரை கொடுத்தாள்... 
அவரிடம் பேச்சை ஆரம்பிக்க ஒரு காரணம் கிடைத்தது, அவர் ஒரு மயக்கவியல் (Anesthesia) மருத்துவராக இருக்க கூடும்அவரோடு பயணம் தொடர்ந்தது... 
அவர் ஒரு நட்சத்திர உணவு விடுதியில் தலைமை சமையல்க்காரர், சமந்தமே இல்லாமல் மாத்திரை பற்றி அறிந்தது ஆச்சரியம், அவர் தொழிலுக்கும் இதற்க்கும் ஆன தொடர்பை அறிய ஆவல்... உணவு தயாரிப்பில் அடுமானை (Bakery) பிரிவில் சம்பந்தப்பட்டு இருக்கலாம்... வெகுநேரம் போட்டு வாங்கலுக்கு பின் சில உண்மைகள் வெளி வந்தன...
இன்று நம் நாடு மேற்கு கலாசாரத்திற்கு அடிமை, அதன் பாதிப்பு பெண்களிடத்தில் அதிகம்... சில பெண்கள் பாலியலில் ஈடுபடுகிராகள், சிலர் ஈடுப்படுத்த படுகிறார்கள்... ஒரு முறை ஈடு படுத்தபட்டால் அது அவர்களிடம் தொடர்கிறது... பாலியலில் தாமாக ஈடுபடும் சாக்கடையை அலசி பயன் இல்லை.
சில அப்பாவி பெண்களை  தில் ஈடுபடுத்த பல சதிகள் நடக்கிறது தினம் தினம்... ஏதேனும் ஒரு பெண் மீது மோகம் வந்தால் அவளை பின் தொடர்கிறார்கள்... அவளை சில நட்சத்திர  உணவகம் பக்கம் வர வைக்கிறார்கள், அங்கு அவளுக்கு உணவில் வயிற்றுப்போக்கு (Diarrhea) உணர்வு வரும் அளவுக்கு மாத்திரை கலக்கப்படுகிறது, ஒரு சமயம் கழிவறை செல்ல, அவள் படம் டுக்க படுகிறாள், பின் அதை அவளிடம் காட்டி நினைத்ததை சாதிக்கிறார்கள்... அவள் அவர்களின் அடிமை ஆகிறாள்...
இங்கு நான் கூறியது ஒன்று தான் ஆனால்  அவர் பல வழிகளை சொன்னார்... கூற மனம் இல்லை... விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என் நோக்கம் மாறாக அனைத்தையும் கூறி பெண்களை விழி பிதுங்க செய்வது அல்ல... 
இதை தடுக்க ஒரே வலி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்... உங்கள் ஆடை கலைபதாயின் நம்பிக்கையான இடத்தை தவிர வேறு எங்கும் கூடாது... 

No comments:

Post a Comment