Recently I read a Tamil book
written by Mr. Irai Anbu I.A.S, part II of “Odum Nadhiyin Osai’ which means
“The Sound of the Flowing River”. A chapter titled ‘what is development?’ was
thought provoking. Usually if we visit a city after a long time, we exclaim,
“wow. is this the place which I saw before!! what a development..”. If we visit
a village our reaction is just the opposite.
Writer poses this question,”
Do skyscrapers, market streets, entertainment arenas show development? does
that mean villages can’t develop?”. In his view, a place should have a well
organized library which is well utilized by its people to improve their general
knowledge, educational values & radical ideas to be said to have been
developed.
My gaze went onto two
friends, any two from a village or a city, meeting after a long time. when they
meet, they ask about each others well doing, their family, jobs, salaries, if
time allows a lunch together and then they go in their ways. No one read books
if so they wont share about them on such meetings.
One’s job or salary never
shows one’s development but sadly we think so. These are passing clouds while
wisdom through reading or experience is a monsoon. Thirst for search has been
greatly reduced in us. Have we searched for evergreen books? have we been a
part of any worthy conversations? have we yearned for intelligent, broad
minded, experienced companionship? Leaving these eternal quest, we thrive for
good job in our visiting card and more salary on our wallet.
Search, read and feel good
books then share with your friends. For they are the only mean for individual
development.
May this world glow with this
eternal sunshine.
சமீபத்தில் ஐயா இறை அன்பு I.A.S அவர்கள் ஏழுதிய “ஓடும் நதியின் ஓசை” இரண்டாம் பாகத்தை படித்தேன். அதில் அவர் "எது வளர்ச்சி? " என்ற தலைப்பில் எழுதி, ஆழ்ந்து சிந்திக்க வைத்தார். பொதுவாக நாம், எந்த நகரதிர்காவது ரொம்ப நாட்களுக்கு பின் சென்றால் நம் நாவில் சுழலும் முதல் வார்த்தை "ஆஹா என்ன வளர்ச்சி !!! முன்பு பார்த்த இடமா இது ???" என்பதே ஆகும். இதுவே கிராமம் என்றால் நம் எண்ணம் எதிர்மறை ஆகும்.
ஆசிரியரின் கேள்வி வான் உயர்ந்த கட்டிடங்களும், அங்காடி தெருக்களும், பொழுது போக்கு இடங்களும்மா ஒரு இடத்தின் வளர்ச்சி??? அப்படியானால் கிராமங்கள் வளர்ச்சி அடைய முடியாதா???
ஆசிரியரின் பார்வையில் கிராமமோ நகரமோ அதில் மனிதர்கள் தன் அறிவை பெருக்கும் புத்தக சாலை இருத்தல் வேண்டும், அதை அவர்கள் நன்கு பயன்படுத்த வேண்டும். அங்கு வாழும் மக்கள் கல்வி அறிவிலும், பகுத்தறிவிலும், பொது அறிவிலும் சிறந்து விளங்கினால் அதுவே அவ்விடத்தின் வளர்ச்சி என்கிறார்.
ஆசிரியர், பொதுவாக ஒரு இடத்தின் வளர்ச்சியை பற்றி விளக்கினார். என் பார்வை தனி ஒரு மனிதன் மீது பாய்ந்தது. அவன் கிராமவாசி நகரவாசி என பிரிக்க விரும்பவில்லை. பொதுவாக இரண்டு நண்பர்கள் வெகுநாட்களுக்கு பின் சந்தீத்தால் அவர் இடையில் ஆன பேச்சுவார்த்தை இப்படியே தொடங்கும்.
முதலில் நலம் விசாரிப்பர், அவர்கள் குடும்பம் பற்றி கேட்டு அறிவர், பின் உத்தியோகம், பின் சம்பளம், வாய்ப்பு இருந்தால் ஒன்றாக உணவு, பின் பிரியாவிடை பெறுவர். எவரும் தன் வாழ்வில் நாம் கற்கும் பாடத்தை பிறரோடு பகிர்வது இல்லை, எவரும் புத்தகம் படிபதில்லை அப்படியே படித்தாலும் நண்பர்களோடு இத்தகைய சந்திப்பில் பகிர்வது இல்லை.
ஒருவனின் வேலையும், சம்பாத்தியமும் ஒருவனின் வளர்ச்சியை ஒருபோதும் குறிக்காது, ஆனால் இன்று நாம் அதையே வளர்ச்சி என எண்ணுகிறோம். நிலையற்ற செல்வங்கள் இவை.
பட்டறிவும் படித்து பெரும் அறிவும் நிலையானது எவரும் களவாட முடியாதது.
இன்று நம்மிடம் தேடல் என்பது குறைவு, நம் வாழ்வு செழுமை பெற புத்தகங்களை தேடியது உண்டா, நம்மில் அறிவில் சிறந்தோரை தேடியது உண்டா, அறிவுபூர்வமான உரையாடலில் கலந்துக்கொண்டது உண்டா,
கடை வீதியில் புத்தக கடையை தேடியது உண்டா இப்படி நிலையான செல்வதை தரும் ஏதையும் தேடாமல் தேடுகிறோம் நல்ல வேலையை, நல்ல சம்பாத்தியத்தை இவை நிரந்தரம் என கருதி.
நல்ல புத்தகங்களை தேடுங்கள், தேடிய புத்தகத்தை படித்த உடன் நண்பர்களோடு பகிருங்கள் நல் அறிவு என்ற செல்வம் வையம் எங்கும் பரவட்டும் பின் தனி ஒரு மனிதனும் வளர்ச்சி அடைவான். புத்தகமும் அனுபவமும் மட்டுமே ஒருவனுக்கு உண்மையான வளர்ச்சியை தரும்...
No comments:
Post a Comment