Tuesday, 14 May 2013

Say No To Caste (ஜாதிகள் இல்லையடி பாப்பா ! )

ஜாதிகள் இல்லையடி பாப்பா ! 

செல்வமும் செல்வாக்கும் 
சேர்ந்துவிட்டால் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா ! 


கையிலே காசிருந்தால் 
உயர்ந்த ஜாதி ! 
பையில் பணம் 
இல்லைஎன்றால் 
தாழ்ந்த ஜாதி ! 

தாழ்ந்த சாதிக்காரனிடம் 
பதவி பணம் இருந்தால் 
உயர் ஜாதிக்காரன் 
ஓடிவந்து கால்களிலே 
சாஷ்டாங்கம் பண்ணும்போது 
ஜாதிகள் இல்லையடி பாப்பா ! 

கடவுளுக்குப் பணிய 
மறுப்பவனும்கூட 
காசிருப்பவன் காலில் 
கண்மூடி விழுகின்றான் ! 
ஜாதிகள் இல்லையடி பாப்பா ! 
உன் கையில் காசிருந்தால் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா ! 

(Thx - பீ. எம். கமால் , கடையநல்லூர்)

No comments:

Post a Comment