நமது சமூகம் அழகானது... (அழகு என்பது சீவி சிங்காரித்ததல்ல, சீர்த்திருத்தபட்ட ஓர் சமூகத்தை). இந்த வாக்கியம் உண்மையாக சொப்பனம் கொள்கிறேன் தினம் என் உறக்கத்தில், நான் மட்டுமா?
நம்மில் பலர் இப்படி தான்!!!… விழிதிருக்கையில் அதிக பட்சம் தேநீர் கடை மேசையில் வாய் பேசியே மீசையை முறுக்கும் மாவீரர்கள், நடத்துவதோ வேட்டி பேச்சி என்னும் மெகா தொடரை.
நம் சமூகம் கலங்க பட்டு இருக்கிறது, அதன் உயரத்திற்கு ஓர் உதாரணம் "நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுக்கிறேன் ஆனால் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று எடுக்க முடியாது" என்றார் ஓர் உயர் அதிகாரி தான் பதவி ஏற்க்கையில்.
நம் சமூகம் கலங்க பட காரணங்கள் எவை லஞ்சமா? அதிகார துஷ்பிரயோகமா? பொருபின்மையா? அலட்சியமா? சோம்பலா? அவசரமா? இப்படியே போனால் பட்டியல் தான் நீளும். உங்கள் தேடலை நிறுத்திவிட்டு தேடுங்கள் மனிதன் துளைத்த நேர்மையை.
நேர்மைக்கும் தனிமனித ஒழுக்கத்திற்கும் சமந்தம் இருக்கிறது. தனிமனித ஒழுக்கமே நேர்மையை தரும். (Self
Discipline gives Honesty). இவன் முதுகு தெரியாமல் எவன் முதுகும் தெரியும் வண்ணம் கண்கள் படைக்க பட்டதாலோ என்னவோ, இவன் குறை கூறுவது தொடர்கிறது. மற்றோரின் நேர்மையை விமர்சிக்கும் முன் மறவாதீர் உங்கள் நேர்மையை அளபதிர்க்கு.
நாம் எவரையும் கை காட்டினாள்,
ஆள் காட்டி விரல் மட்டுமே அவரை சுட்டும்,
கட்ட விரல் மீதம் உள்ள மூன்று விரல்களையும்
நம் பக்கம் காட்டும்.
விமர்சிக்கும் போது அளக்கப்படாத நேர்மை ஏனோ அளக்க படுகிறது செயலில் இரங்கையில். இதற்க்கு ஓர் உதாரணம் கொடுக்க ஆவல், எங்காவது சாலையில் பார்ப்போம் போக்குவரத்து காவலன் லஞ்சம் வாங்குவதை... அவனை நாலு தெரு தாண்டி சென்று விமர்சிபதாயினும் சரி, வைவதாயினும் சரி தயங்குவது இல்லை, அதற்க்கு நம் நேர்மையின் அளவை அளப்பதும் இல்லை.
அவன் நடு சாலையில் அத்துணை வாகனங்கள் மத்தியில் தானே லஞ்சம் வாங்கினான், அங்கேயே ஒரு 10 வாகனத்தை நிறுத்தி அவனை கேள்வி கேட்கலாமே? எவரும் முன் வர மறுப்பார். நாம் தப்பித்தோம் என்று சிலர், வீண் பிரச்சனை என்று சிலர், ஆவணங்கள் இல்லாமல் பலர். செயலில் இறங்க தகுதியும் துணிச்சலும் இல்லாத இவர்கள் வாய் பேச்சி வீணர்கள் மட்டும் அல்ல நேர்மையற்றவர்கள்.
சற்று சிந்தியுங்கள்; அரசாங்கம், தனியார் நிறுவனம் இப்படி எல்லாவற்றிலும் குறை கூறாமல், இந்த சமூகத்திற்கு நேர்மை அற்ற அதிகாரிகளை உருவாகியது யார் ? என்று, மனசாட்சி உடையோர்க்கு தெரியும் அதில் நம் அவசரம், போக்கிரி தனம், இப்படி பல இருப்பதை. இந்த சமூகத்தில் நேர்மையை எதிர் பார்க்கும் முன் நேர்மையை முதலில் நாம் பின்பற்றுவோம். ஏன்
நாம் அனைவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்க கூடாது ?
"லஞ்சம் கொடுபதால் பெற படுகிறதா இல்லை வாங்குவதால் கொடுக்க படுகிறதா" என்ற புளிச்சி போன பட்டி மன்றத்தை ஓயவைத்து நாமே ஓர் தீர்மானத்திற்கு வருவோம், லஞ்சம் கொடுபதாலேயே பெற படுகிறது, கொடுப்பதை நிறுத்த தயாரா? தயங்காமல் முன் வாருங்கள் சுத்தம் செய்வோம் சமூகத்தை.


No comments:
Post a Comment