Saturday, 11 May 2013

This may be the Reason behind the SUICIDE .... and you can get an Idea to Stop SUICIDE


இந்த தேசம் கோழைகளை உருவாக்குகிறது... நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்பது வாய்ச்சொல் ஆகியது, தெளிந்த அறிவும் அதற்கான தேடலை இளைஞர்களிடம் இந்த சமுதாயம் குறைத்துவிட்டது. அன்னை உணவு ஊட்டினால், ஆசான் கல்வி கொடுத்தார், தன்நம்பிக்கை??????  குறைக்கூற போனால் எவரும் மிஞ்ச மாட்டார்கள், ஓர் தன்நம்பிக்கை  இல்லா மனிதனுக்கு முன் இச்சமுதாயமே குற்றவாளி தான். சுதந்திரம் அடைந்த இந்த திரு நாட்டில் பேச்சுரிமை அனைவருக்கும் கொடுக்க படுகிறது, என மனதை தொட்டு கூற முடியுமா?? கொடுக்க படுகிறது என்போர் முதலில் உங்கள் மனசாட்சியை தேடுங்கள்.. 


அதிகம் பேசுகிறான் இந்த பொடியன் என்று எண்ணினால் மன்னியுங்கள், கலங்கி உள்ளது என் மனம்இந்த பதிவு ஆத்திரத்தின் வெளிப்பாடல்ல ஆழ்ந்த சிந்தனையின் வெளிபாடு.

ஓர் செயலில் இறங்கினால் உன்னால் முடியாது என்பது முதல் பதில், இல்லை முடியுமா??  என்ற முதல் கேள்வி. உன்னால் முடியும் என்போர் அத்தி பூ பூத்தார் போல்இப்படி பிள்ளைகள் தன் வீட்டிலேயே முடக்க படுகிறார்கள்தன்நம்பிக்கை தோற்கடிக்க படுகிறது

            பெற்றோர்கள் சமுதாயத்தின் மீது உள்ள அவர்களது பயத்தை தன் பிள்ளைகள் மீது திணிப்பர். படிப்பும் மதிப்பெண்ணும்  ஒருபோதும் ஒருவனின் தகுதியை குறிக்காது, இதை பெற்றோரும் நன்கு அறிவர், ஆயினும் தான் ஈன்று எடுத்த பிள்ளைகளை மட்டம் தட்டுகிறார்கள். அது பாசமா இல்லை வீண் செலவின் விலைவா.

            பிள்ளைகள் திறமைசாலிகள் ஆனால் எல்லோரும் ஒரே துறையில் அல்ல, எல்லோரும் ஏதோனும் ஒரு துறையில். இப்படி சிந்திக்கையில் ஒன்றை மறவாதீர், கல்வியில் பல துறைகள் இருக்கின்றன சற்று கல்வியை விட்டு வெளியே வந்து பாருங்கள் கல்வியும் ஒரு துறை தான். கல்வி அன்றி பல துறைகள் உள்ளனஇசை, நடனம், நடிப்பு, ஓவியம், சிறப்பம், எண்ணம், எழுத்து, கவிதை, இப்படி ஏதேனும் ஒன்றில் உங்கள் பிள்ளை வாழட்டுமே ஏன் உங்கள் தகுதியையும் உங்கள் பிள்ளைகள் பெறப்போகும் தகுதியையும் ஒப்பீடு செய்கிறீர்கள். உங்களில் தகுதியில் பிள்ளைகள் வாழ்ந்தால், அது வரமே ஆனாலும் சாபம், தனி ஒரு மனிதன் தன் தகுதியில் வாழ்வதே அவனது உண்மையான வெற்றி, வெல்லட்டுமே உங்கள் பிள்ளைகள்.

            பட்ட படிப்பிற்கு தலையை அடைமானம் வைக்கும் பெற்றோர், ஏனோ பிள்ளைகள் பட்டறிய தலை ஆட்டுவது இல்லை, இதை பாசம் என கூறி பாசாங்கு செய்து முட்டாள் ஆக்காதீர்கள். நம்பிக்கை இன்மையே இதற்க்கு காரணம். பெற்றோர் நம்பாவிடின் மற்றோர் நம்புவது சாத்தியமா.  பிள்ளைங்களின்  எண்ணம் மற்றவரின் கட்டுபாட்டுக்குள், சுதந்திரம் இல்லை, பிள்ளைங்களின்  ஆர்வம் பற்றி அறிந்தோர் இலர்

            உங்கள் வறட்டு கௌரவத்தை மூட்டை காட்டுங்கள், தேடுங்கள் உங்கள் பிள்ளைகள் மறைத்து வைத்திருக்கும் திறமையை, அதை நீங்களே அறிய முடியும் பிள்ளைகள் கூட தேடி தோற்கலாம், காரணம் உங்கள் பிள்ளைகளை மழலை பருவத்தில் இருந்தே நீங்கள் அறிவீர், பாவம் அவர்கள் அறியாத பருவம் அது. உங்கள் பிள்ளைகள் கிறுக்கிய செவுறும், தட்டிய டப்பாவும், ரசித்த பாடலும், ஆடிய ஆட்டமும் மறக்க முடியாத பொக்கிஷங்கள், மறப்பின் நினைவு கூறுங்கள். அவர்கள் திறமை வியப்பை நிச்சயம் ஊட்டும்
           
மறவாதீர் கல்வி முக்கியம் தான் ஆனால் அதுவே பிரதானம் என என்னால் வேண்டாமே!!!

 ஒரு பிள்ளையின் படிப்பு, நடை, உடை, எதிர்காலம் இப்படி  எல்லாவற்றில் "கட்டாயம்" கலக்கும் என்பதை தெரிந்ததாலோ என்னவோ இன்றெல்லாம் சுக பிரசவம் நடபதே இல்லை!!! அதிலும் கட்டாயப்படுத்தி அறுத்து எடுக்கிறார்கள் தாயிடம் இருந்து சிசுவை... 

"கட்டாயம், சமுக கவலை, கெளரவம்" இந்த மூன்று கிருமிகள் உங்கள் பிள்ளைகளை அண்டாமல் காபாதினால், தற்கொலை என்ற நோய் உங்கள் பிள்ளைகளை தீண்டாதுதன்நம்பிக்கையை ஊட்டுவதே ஒரே மருந்து, நோய் வரும் முன் கொடுக்க வேண்டிய மருந்து.

பிள்ளைகள் தன் போக்கில் போகட்டும்
பாதை தவறாயின் 
உங்கள் முற்போக்கு சிந்தனை மலரட்டும் 

"கட்டாயம், சமுக கவலை, கெளரவம்" இதை யோசிக்காது 
திறமைசாலியான நம் பிள்ளை சாதிக்க வைக்க துணை நில்லுங்கள் ... 

ஒவ்வொரு இளைஞனும் சாதிப்பான், இந்தியாவும் சாதிக்கும்... 


No comments:

Post a Comment